×

“என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்பதால் பட்ஜெட்டில் கண்டுகொள்ளவில்லை”- கனிமொழி

 

தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க போவதில்லை அவர்களுக்கு நாங்கள் ஏன் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜக இந்த மத்திய பட்ஜெட்டை அமைத்திருக்கிறது என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “இத்தாண்டு பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, திட்டங்களும் இல்லை. தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க போவதில்லை அவர்களுக்கு நாங்கள் ஏன் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜக இந்த மத்திய பட்ஜெட்டை அமைத்திருக்கிறது. மாநிலங்கள் எதிரான நிதிநிலை அறிக்கையாக இது உள்ளது. 

தமிழ்நாட்டிற்கு எந்த நிதியையும் தராமல், நமது கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக ஒரு திட்டத்தை இன்று அறிவித்துள்ளது பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை ஏமாற்றிய ஒன்றிய பாஜக அரசுக்கு, 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்பதால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை கண்டுகொள்ளவில்லை.மாற்றம் இல்லாத ஏமாற்றம்... ஒன்றிய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவுக்கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை. தேர்தல் வரப்போகும் நிலையிலும் கூட, மத்திய பாஜக அரசு இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் பற்றி நினைக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏமாற்றம் தவிர வேறு எதுவும் இல்லை. மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41% என்று ஒன்றிய பா.ஜ.க அரசு சொல்வது  மிகப்பெரிய அநீதியாகும்.” என்றார்.