×

“அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்றுதான் எங்களுக்கு கவலை ”- கனிமொழி

 

தஞ்சை செங்கிப்பட்டியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மகளிர் பங்கேற்கும் பிரம்மாண்ட  டெல்டா மண்டல மாநாட்டை  ஆய்வு செய்தார் கனிமொழி எம்.பி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாடு முழுவதும் பெண்கள்  தி.மு.க மறுபடியும் வெற்றி பெற வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் திட்டமாக அறிவித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள். மீண்டும் அதை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளார்கள் எனவே அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எங்களுடைய கூட்டணி மக்களுடன் உள்ளது. நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றி பெறும். அவர்கள் யாரை சேர்த்தாலும் - உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். இன்னும் கொஞ்ச காலத்திற்கு அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை தான் எங்கள் எல்லோருக்கும் உள்ளது. தேர்தல் வருகிறது. அதனால் பிரதமர் அதிக தடவை தமிழ்நாட்டிற்கு வருவார்” என்றார்.