விஜயகாந்த் மறைவிற்கு திமுக எம்.பி.,கனிமொழி இரங்கல்!
Dec 28, 2023, 12:13 IST
விஜயகாந்த் மறைவிற்கு திமுக எம்.பி.,கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூகவலைத்தள பக்கத்தில், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்.