×

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா காலமானார். அவருக்கு வயது 68. திமுக பிரமுகர்களின் அதிகம் ஊடகங்களில் பேசப்படுபவர் ஜெகத்ரட்சகன். சமீபத்தில் வரி ஏய்ப்பு, சொத்து சேர்ப்பு காரணமாக இவரின் 80 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
 

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா காலமானார். அவருக்கு வயது 68.

திமுக பிரமுகர்களின் அதிகம் ஊடகங்களில் பேசப்படுபவர் ஜெகத்ரட்சகன். சமீபத்தில் வரி ஏய்ப்பு, சொத்து சேர்ப்பு காரணமாக இவரின் 80 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அனுஷ்யா உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் அடையாறில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனின் மனைவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெகத்ரட்சகன் மனைவியின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்படவுள்ளது.