☰
×

"அப்பாவ எங்க காணோம்னு சொல்றவனுக்கு, வந்துட்டோம்னு சொல்லணும்"- கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி?

 

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பது திமுக தொண்டனாக எங்களின் ஆசை என திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். 


திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய  திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "தவெக அரசை ஜோதிடர்கள் தான் நடத்துகிறார்கள், இது பழி வாங்கும் நடவடிக்கை தான்..எங்கள் மீது எம்.ஜி.ஆரும் வழக்கு போட்டார்..ஜெயலலிதாவும் வழக்கு போட்டார்..திமுகவினர் மீது வழக்கு போடுவது ஒன்றும் புதிதல்ல.  கொளத்தூரில் மீண்டும் தலைவர் போட்டியிட வேண்டும். 'அப்பாவைக் காணோம்' என்று சொன்னவருக்குத் திரும்ப வந்துட்டேன்னு சொல்லணும்னு ஒரு தொண்டனாக எனக்கும் ஆசைதான். ஆனால், கொளத்தூரில் போட்டியிடுவது குறித்து தலைவர் ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து அவரே அறிவிப்பார்" என்றார்.