முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றிய திமுக எம்எல்ஏ
ஜூலை 1ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் ‘ஓரணியின் தமிழ்நாடு’உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் நேரடியாக சென்று உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தியது. இந்தப் பரப்புரை மூலம், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து 100% குடும்பங்களையும் நேரில் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுப்பர்! இதன் மூலம் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொருநகரத்திலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% மக்களைத் திமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்வதே இலக்கு என்று திமுக தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பரப்புரையின் கீழ் திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்திருந்தார்.
இந்நிலையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில், திமுகவுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டதாக கூறி, கட்சியில் இணையாதோரின் பெயரையும் பட்டியலில் இணைத்து கட்சி தலைமைக்கு MLA காதர்பாட்சா முத்துராமலிங்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.