×

“ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் சீட்டே கொடுக்கக்கூடாது” - திமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

 

மதுரையில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட மாநகர செயலாளரும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி கலந்துகொண்டார். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய தளபதி, “மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்.எல்.ஏ. ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன? என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்தமுறை சீட்டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் INDIA கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு ரூ.3,000, ரூ.4,000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டு போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பதுதான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என விமர்சித்திருந்தார்.