விஜயை கலாய்த்த திமுக எம்.எல்.ஏ
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை, அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இணைந்து கலாய்த்த வீடியோ வைரலாகிவருகிறது.
Admk MLA s என்ன டா
— தல அரவிந்த் (@aravinth43AK) June 19, 2026
பண்ணுறீங்க 😂😂
தூங்குற CM aa காலச்சிட்டு இருக்கீங்க 😂😂😂😂pic.twitter.com/CvfVjeStmu
பேரவையில் நிகழ்ந்த பரபரப்பான விவாதங்கள் மற்றும் அவை நடைமுறைகளின் போது முதலமைச்சர் விஜய், எப்போதும் போல அமைதியாகவும், சோகமான முகத்துடனும் அமர்ந்திருந்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கியமான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பதில் அளிக்காமல் மௌனம் காத்தது, திமுக - தவெக இடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், முக்கியப் பிரச்சனைகளில் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு, பொதுப்பணித்துறை அமைச்சரை பதிலளிக்கச் சொன்னதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும் விஜய் பேரவையில் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை, அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இணைந்து கலாய்த்த வீடியோ வைரலாகிவருகிறது. திருவையாறு திமுக எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன் மற்றும் சக்கரபாணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ், முகத்தை சுளிக்கும்படி செய்துகாட்டிய வீடியோ வைரலாகிவருகிறது.