திமுக எம்.எல்.ஏ. கார் மோதி முதியவர் பலி
Dec 16, 2025, 18:32 IST
ஒரத்தநாடு அருகே திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சென்ற கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் தென்னமநாடு அருகே தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கார் மோதி முதியவர் ஒருவர் பலியானார். முதியவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எம்.எல்.ஏவின் கார் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.