"போதையை ஒழிப்போம் என சொல்லிவிட்டு மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்னு சொல்றாங்க”- மார்க்கண்டேயன்
போதையை ஒழிப்போம் என்று தவெக சொன்னது. மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்னு சொல்றாங்க என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், “மதுவை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னவர்கள், இந்த ஆண்டு 5000 கோடி ரூபாய் மதுவினால் கூடுதல் வருமானம் வரும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வருமானத்தை உருவாக்க பல்வேறு வழிகள் இருக்கிறது. இத்தனை வழிகள் இருந்தும் மதுவை மட்டும் திறந்து விட்டு ரூ.5000 கோடி கூடுதலாக வருமானம் ஈட்டுவோம் என்று சொல்வது மிகப்பெரிய ஒரு வேதனையை தருகிறது. திமுகவை கைது செய்து முடக்க முடியாது. நீங்கள் முதலமைச்சரை இவ்வளவு தடிமனான வார்த்தைகளால் பேசியிருக்கக் கூடாது என்றுதான் தலைவர் என்னை அறிவுறுத்தினார்” என்றார்.