×

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல் நல்லடக்கம் ! கண்ணீர் மல்க விடை கொடுத்த திமுக தொண்டர்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.

மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாட்டில் எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது இதுவே முதல்முறையாகும். எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவு குறித்த விவரம் உள்துறை, மத்திய சுகாதாரத்துறை கவனத்திற்கு சென்றுள்ளது

இதையடுத்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெ.அன்பழகன் உடல் முழுவதும் மூடப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பாதுக்காப்பாக எடுத்து செல்லப்பட்டது. அவரின் உடல் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே புதைக்கப்பட இருந்தது. அதன்படி கொரோனாவால் இறந்தவர் உடலை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளதோ அதன்படியே அவரின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு சூழ்ந்திருந்த திமுக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல் சென்னை கண்ணாம்மாபேட்டையில் உள்ள மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.  அப்போது அந்த சவக்குழியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  அதே வேளையில் அன்பழகனின் உருவப்படத்திற்கு அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செய்தனர்.