×

“என்னை ஜெயிலில் வைத்து விடுவியா? உன் ஆட்சி எண்ணப்படுகிறது”- மீண்டும் விஜயை ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்

 

மீண்டும் முதலமைச்சர் விஜயை தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்  ஒருமையில் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அனிதா ராதாகிருஷ்ணன், “இன்று நம்மளை பல வியூகங்கள் வகுத்து வீழ்த்தியுள்ளார்கள். அதனால் தான் நமது தலைவரே தோற்கடிக்கப்பட்டார். நான் 5 நிமிடங்கள் பேசினேன் கொத்து பரோட்டாக்கிவிட்டார்கள் என தலைவர் ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றவன் கூறுகிறான். மாலை 6 மணிக்கு சென்றால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு எழுந்திரிப்பான். அவனுக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்து வருகிறார். தமிழகத்தில் யார் இருக்கிறார், யார் இல்லை என்பதே அவருக்கு தெரியாது. சினிமாவில் நடிக்கிற மாதிரி நடிக்கணும்னு நினைக்கிறார். இந்த வேஷமெல்லாம் எடுபடாது. உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். எந்த இடத்திலாவது தவெக ஜெயிக்கட்டும் பாக்கட்டும். யாரும் ஜெயிக்க முடியாது. இடைத்தேர்தலில் ஸ்டாலின் யாரை ஆதரிக்கிறாரோ அவர் தான் வெற்றி பெறுவார் என்ற வரலாற்றை உருவாக்கப் போகிறோம். 1 மாதம் இல்லை 5 வருடங்கள் ஜெயிலில் வைத்தாலும் யாராலும் இந்த இயக்கத்தை அசைத்து பார்க்கமுடியாது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது.

நம்முடைய தலைவருக்கு ஈடாக எந்த தலைவராவது சொல்ல முடியுமா? நம்முடைய இளந்தலைவருக்கு இணையாக ஒரு தலைவராவது சொல்ல முடியுமா? நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பிக்கு ஈடாக எந்த பாராளுமன்ற உறுப்பினர் பணியாற்றுகிறார்? அப்பேற்பட்ட இயக்கத்தை கொண்ட இயக்கம் திமுக. மேடையில் நான் பேசியதற்காக என்னை பிடித்தார்கள்.  என்னை ஜெயிலில் வைத்து விடுவியா?” எனக் கேள்வி எழுப்பினார்.