☰
×

"வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்"- மு. க. ஸ்டாலின் 

 

தமிழ்நாட்டின் நலன் கருதியே திமுக முடிவெடுக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.

We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.

We will… https://t.co/qRM5Px6PtN

— M.K.Stalin (@mkstalin) November 29, 2026


மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவு முடிவை மறு பரிசீலிக்க கோரிக்கை விடுத்த ராகுல் காந்திக்கு மு. க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "தமிழ்நாட்டின் நலன், மக்களின் நலன் கருதியே எப்போதும் ஒவ்வொரு முடிவையும் திமுக எடுத்துள்ளது. இந்த பாதையில் இருந்து நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பார்களாக அல்ல கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும், எங்கள் நிலைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் கிடையாது. அரசியலமைப்பை  பாதுகாப்பதில் திமுகவின் பங்கை அங்கீகரித்த ராகுலுக்கு நன்றி " எனக் குறிப்பிட்டுள்ளார்.