“சென்னை வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் திமுக அரசின் பெயர்தான் இருக்கும்" - மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் திமுக அரசின் பெயர்தான் இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ
— M.K.Stalin (@mkstalin) October 8, 2026
🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான்.
🚇 தான் பார்த்துப் பார்த்து… pic.twitter.com/bxzTUpc3Tu
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ
🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான்.
🚇 தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் கலந்துகொள்ள முடியாதபோது,
“சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார்.
🚇 சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.