“நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான்” - மு.க.ஸ்டாலின்
May 18, 2026, 20:12 IST
13 வயது சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி மனதைப் பதைபதைக்க வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கோவை இருகூர் அருகே 13 வயது சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனித்து, அவர்கள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையும், அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்தும், நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியர்கள் அவர்களிடம் பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும். நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.