☰
×

“தமிழ்நாட்டில் இன்றைக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலை”- மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாட்டில் இன்றைக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இருக்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கென்று நீண்ட, நெடிய தனி அரசியல் அடையாளம் உண்டு. 1977-ல் தொடங்கி, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் ஆற்றலைப் பெற்றவர் அவர். தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் என் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக செயல்பட்ட பெருமைக்குரியவர்.  பட்டா வழங்குவதில் உள்ள பிரச்னையை தீர்க்க விடாபிடியாக அணுகி வெற்றி கண்டவர். கடந்த திமுக ஆட்சியில் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இருக்கிறது. சிங்கப்படையை பாதுகாக்க புதிய படை ஒன்றே தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவைத்தவிர பாலியல் குற்றங்கள், கொலை - கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை. கடந்த சில நாட்களாக குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். த.வெ.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையைக் காப்பாற்றவே, மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் குற்றசம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.  தவெக ஆட்சியில் அரிவாள் வெட்டு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்" என்றார்.