“வாரிசு அரசியல் என்பது இத்துப்போன குற்றச்சாட்டு”- மு.க.ஸ்டாலின்
வாரிசு அரசியல், ஊழல், இந்து விரோத கட்சி என எங்களை பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
NDTV சார்பில் நடைபெறும் "Tamilnadu Summit” நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாரிசு அரசியல் என்பது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இத்துப்போன குற்றச்சாட்டு. பாஜகவினர் ஊழல் குற்றச்சாட்டு கூறுகின்றனர். ஆனால் அவர்களுடன் இருப்பவர்கள்தான் ஊழல்வாதிகள். ஊழல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவரின் கட்சியோடுதான் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இதுவரை எங்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வந்தாலும், மக்களுக்கு முன்னால் நின்று, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று வாக்கு செலுத்தினால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். ஓட்டு வாங்கினால் மட்டும் தான் வெற்றி! நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு vs என்டிஏ என்ற கோணத்தில் நடக்கிறது. தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கட்டாயப்படுத்தி ஏற்படுத்தப்பட்டது; என்டிஏ கூட்டணி துரோகக் கூட்டணி" என்றார்.
.