☰
×

"எனக்கு அழைப்பு வரவில்லை... ஆனால் போன் வந்தது"- ஸ்டாலின் 

 

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு அழைக்க திமுக தலைவர் ஸ்டாலினை ராகுல் காந்தி தொடர்புகொள்ள முயன்ற போது, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பணிகளில் பிசியாக இருப்பதாக கூறி ராகுலுடன் பேசுவதை ஸ்டாலின் தவிர்த்துவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.  சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஒரே நாள் இரவில் தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது.  சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தொகுதிப்பங்கீடு பிரச்சனையின் போது மு. க. ஸ்டாலினின் தொலைப்பேசி அழைப்பை ஏற்க ராகுல் மறுத்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு. க. ஸ்டாலின், "சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும்படி எனக்கு அழைப்பு வரவில்லை. போனில் எனது உதவியாளரை தொடர்பு கொண்டு தகவல் சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நான் வாழ்த்துச் சொல்லி இருக்கிறேன். கடிதமும் அனுப்பி இருக்கிறேன்" என்றார்.