“நான் வாக்கு கேட்டு வரவில்லை, நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்..தவெக ஆட்சி 4 மாதங்களில் நாறிப்போனது”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அரசு செயல்படாமல் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நான் வாக்கு கேட்டு வரவில்லை, நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்.. ஒருவர் கொடுத்த பெட்டியால் மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடக்கிறது. பெட்டி கொடுத்தது யாரு?பெட்டி வாங்குனது யாரு?ஒருத்தர் கிட்ட பெட்டிப் பெட்டியா பணத்தை திணிச்சதால, உங்கள் மேல் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. சினிமாவை விட்டுவிட்டு மக்கள் முன் விஜய் நடிக்கிறார். எம்.எல்.ஏவை விலைக்கு வாங்குவதுதான் நிர்வாகமா? மாற்றமா? 4 மாதங்களில் சாதனைகள் என சொல்ல என்ன இருக்கிறது? ஜனநாயகன் படத்தில் நடித்த விஜய் தற்போது ஜனநாயகத்திற்கு வில்லனாகி உள்ளார்.
அதிமுகவை உடைத்து சில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டில் அரசு செயல்படாமல் உள்ளது. பல ஊர்களில் ஆளுங்கட்சி வேட்பாளர்களால் நுழைய முடியவில்லை. தவெக ஆட்சி நான்கே மாதங்களில் நாறிப்போனது. தமிழ்நாட்டை தாண்டி பக்கத்து மாநிலங்களில் காசு கொடுத்து பொய் பிரச்சாரத்தில் தவெக ஈடுபடுகிறது. பிரச்சாரத்தில் மனப்பாடம் செய்த டயலாக்குகளை பேசுகிறார். நான் மிகாவில் சிறைக்கு சென்றதை முதல்வர் விஜய் கிண்டல் செய்தார். தலைமை தேர்தல் ஆணையர் குறித்து பேச விஜய்க்கு என்ன பயம்? Chief minister ஆக விஜய் செயல்பட வேண்டும். Cheap Minister ஆக அல்ல...தவெக பாஜகவின் கிளைதான் என்றே பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்” எனக் குற்றஞ்சாட்டினார்.