“Rest இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிற Respect தான் உரிமைத் தொகை”- மு.க.ஸ்டாலின்
ரெஸ்ட் இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிற Respectதான் உரிமைத் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். பின்னர் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சேலம் என்று சொன்னால் அது ஸ்டீல் தான். அதேபோல் ஸ்டாலின் என்ற பெயருக்கு அர்த்தமும் ‘ஸ்டீல்’தான். இந்த ஸ்டீல் சிட்டிக்கு உங்கள் மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறேன். பெண்கள் வலிமையாக இருந்தால்தான், தமிழ்நாடும் வலிமையாக இருக்கும். ரெஸ்ட் இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிற Respectதான் உரிமைத் தொகை. மகளிருக்கு சொத்துரிமை தந்த திமுகவை பார்த்து மகளிர் இட ஒதுகீட்டுக்கு எதிராக இருப்பதாக திசை திருப்பும் பழனிசாமி அவர்களே... பிரச்சனை மகளிர் இடஒதுக்கீட்டில் அல்ல, தொகுதி மறுவரையறையில் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அளவுக்கு அடிமையாக இருக்காதீர்கள்” என பேசினார்.