×

"ஸ்டாலினுக்கும் மரணம் வரும் மண்ணில் புதைப்பார்கள். ஆனால்..” - மு.க.ஸ்டாலின்

 

அண்ணா உருவாக்கிய தமிழ்நாட்டை நாம் காக்க வேண்டும். அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செங்கல்பட்டும், காஞ்சியும் ரெடியா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


செங்கல்பட்டு பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ளம் பாதித்தபோது கூட யாரோ அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள்தான் அதிமுகவினர். கொள்கை பற்று கொண்ட தொண்டர்களுக்கு தலைவனாக இருக்கும் நான் கொரோனாவை கண்டு பயப்படுவேனா? பழனிசாமிக்கு படி அளக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் சாபங்கள் கூட எங்களை ஒன்றும் செய்யாது. எனது இறுதி மூச்சு இருக்கும்வரை தமிழ்நாட்டுக்காக உழைத்து கொண்டே இருப்பேன்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார். ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம். அவதூறுகளை பேசிக் கொண்டிருந்த பழனிசாமி, தற்போது மரணத்தை விரும்பி பேச தொடங்கிவிட்டார். 1.31 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை தந்த நான் இல்லாமல்போக வேண்டும் என்று எடப்பாடி பேசுகிறார். மகளிர் விடியல் பயணத்துக்கு முதல் கையெழுத்திட்ட என் கை மண்ணுக்குள் போக வேண்டுமென பேசுகிறார். இந்த உலகத்துல மரணத்தை சந்திக்காத எந்த மனிதரும் இல்லை. யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் வந்தே தீரும். இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால் சவால் விட்டு சொல்கிறேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை மண்ணிலே புதைக்கும் துணிச்சல் ஒருத்தருக்கும் வராது. இந்த திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான். வாழ்க்கை முழுக்க களத்தில் இருப்பவன்தான் மு.க.ஸ்டாலின். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு நான் அப்படி பேசவில்லை என எடப்பாடி இன்னொரு பொய்யையும் சொல்லியுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் களத்தில் இருப்பது திமுகதான். கொரோனா காலத்தில் மக்களுக்கு ஹெல்ப் லைன் அறிவித்து செயல்பட்டது திமுகதான்” என்றார்.