×

"தமிழ்நாடு மொத்தமும் நாமதான்! செந்தில்பாலாஜி இருக்கிறதால கவலையே இல்லை" - மு.க.ஸ்டாலின்

 

திமுக ஆட்சியில் தமிழ்நாடே அமைதியாக இருக்கிறது. இதனைபார்த்து அதிமுகவும், பாஜகவும் பதற்றம் அடைகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், “கரூரை பொறுத்தவரை எனக்கு எந்தக் கவலையுமில்லை. காரணம், இது செந்தில் பாலாஜி மாவட்டம். பல சோதனைகளை தாண்டி சாதனை படைப்பவர் அவர். கோவை, கரூர் இரண்டும் நம் வசம்தான். ஏன் தமிழ்நாடு மொத்தமும் நாமதான். கரூர் செந்தில் பாலாஜியோட மாவட்டம் அதுனால 100% வெற்றி உறுதி. கோவை செந்தில்பாலாஜியின் புகுந்த வீடுதான். பிறந்தவீடான கரூரை அவர் மறக்கமாட்டார். கரூர் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவை மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கிறேன். திராவிட மாடல் 2.O வெற்றி விழாவுக்கு தயாரா?

சொல்லாத வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளோம். கரூர் என்றால் கழக ஊர். கலைஞர் முதன்முதலில் வென்ற தொகுதி குளித்தலை.  கரூர், கோவை மட்டுமின்றி மொத்த தமிழ்நாடும் நாமதான். ஒரு பக்கம் சாதனைகள், மறுபுறம் புதிய புதிய திட்டங்கள், இதுதான் திராவிட மாடல். திமுக ஆட்சியில் தமிழ்நாடே அமைதியாக இருக்கிறது. இதனைபார்த்து அதிமுகவும், பாஜகவும் பதற்றம் அடைகிறது. 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை இருளுக்குள் தள்ளி, தமிழ்நாட்டை அதிமுக பின்னுக்கு தள்ளியிருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாசப்படுத்திய அதிமுக ஆட்சியை அகற்றி 2021ல் திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம். அதிமுக- பாஜகவின் சதி திட்டங்கள் சந்தி சிரிக்கிறது. அவர்கள் சதி திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என்று கூறி தமிழ்நாட்டை சீரழித்து யாரும் உள்ளே வர முடியாது” என்றார்.