×

10 லட்சம் வீடுகள், மகளிர், முதியோருக்கு மாதம் ரூ.2,000- திமுக தேர்தல் அறிக்கை

 

2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.


அதன்படி,

முதல்வர் காலை உணவு திட்டம்  எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை ரு.2,000 ஆக உயர்த்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்வர் காப்பீட்டுத்திட்டம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

முதியோர் உதவித்தொகை ரூ.1,200 லிருந்து 2,000ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500லிருந்து 2,500ஆக உயர்த்தபடும்

பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும். 

சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்

மகளிர் சுயர் உதவிக்குழுக்களுக்கான கடன் தொகை ரூ.5லட்சமாக உயர்வு

பேரிடர் கால இழப்பீடு ஹெக்டேருக்கு ரூ.25,000 உயர்த்தப்படும்.


அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 இலட்சம் காலி பணியிடங்காள் காலதாமதமின்றி நிரப்படும்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை

டயாலிசிஸ் வசதிகள் இருமடங்காக உயர்த்தப்படும்.

புதுமை பெண் திட்டத்தில் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு