×

‘கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி ஜனவரி 10 வரை தொடரும்’ – மு.க.ஸ்டாலின்

திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிசம்பர் 23 அன்று 1500 என்ற அளவில் நடந்த மக்கள் கிராம வார்டு சபை கூட்டங்கள் 24 அன்று 1600 க்கும் அதிகமாக நடந்துள்ளன. 200 தொகுதிகளில் வெற்றி என்பது நம் முதல் இலக்கு .அதிமுக அமைச்சர்கள் ஒருவரும் வெற்றி பெறக்கூடாது என்பது இரண்டாவது இலக்கு .இந்த
 

திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிசம்பர் 23 அன்று 1500 என்ற அளவில் நடந்த மக்கள் கிராம வார்டு சபை கூட்டங்கள் 24 அன்று 1600 க்கும் அதிகமாக நடந்துள்ளன.

200 தொகுதிகளில் வெற்றி என்பது நம் முதல் இலக்கு .அதிமுக அமைச்சர்கள் ஒருவரும் வெற்றி பெறக்கூடாது என்பது இரண்டாவது இலக்கு .இந்த இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத்துறையினர் அறிக்கைகளும், மக்களின் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தை கெடுத்து விட்டது.

ஜனவரி 10 வரை 16 ஆயிரத்து 700 ஊராட்சி கூட்டங்களை நடத்தி நிறைவேற்றும் வரை மக்கள் சபை கூட்டங்கள் தொடரும். நடத்த வேண்டியவர்கள் நடத்த தவறிய காரணத்தால் மக்களை எதிர்கொள்ள பயப்படுவதால் திமுக மாதிரி கிராமசபை கூட்டங்களை நடத்துகிறது.

அதிமுக அரசுக்கு தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். அதிகாரத்தையும் ,சட்டத்தையும் காட்டி திமுகவை ஒருபோதும் அடக்கிவிட முடியாது. நாங்களும் அதிகாரத்தில் இருந்தவர்கள்; சட்டத்தை அறிந்தவர்கள்; சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுக்களால் திமுகவை சீண்டிப் பார்க்க வேண்டாம் . மக்களாட்சிக்கு எதிராக குமுற தொடங்கி விட்டனர். அவர்களின் வாயை மூடலாம் என நினைத்து திமுகவின் கூட்டங்களுக்கு தடை போட நினைத்தால் அதற்கான பதிலடியை நீங்கள் எதிர் கொண்டாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.