×

“ஜனநாயகத்தை சீர்குலைத்து கேலிப் பொருளாக்கியவர் கிரண்பேடி” : மு.க.ஸ்டாலின் காட்டம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் தாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் புதுச்சேரி அரசின் எம்எல்ஏக்கள் 4பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். பாஜக மற்றும் ஆளுநர் கிரண் பேடியின் நெருக்கடியால் முதல்வர் நாராயணசாமி அதிர்ந்து போனார். அவரது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லாததால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக கூறப்பட்டது. ஆனால் இதை திரும்பப்பெற்ற
 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் தாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் புதுச்சேரி அரசின் எம்எல்ஏக்கள் 4பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். பாஜக மற்றும் ஆளுநர் கிரண் பேடியின் நெருக்கடியால் முதல்வர் நாராயணசாமி அதிர்ந்து போனார். அவரது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லாததால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக கூறப்பட்டது. ஆனால் இதை திரும்பப்பெற்ற முதல்வர் நாராயணசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார்.

இதை தொடர்ந்து நேற்று திடீரென துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழிசை தெலுங்கானாவுடன் கூடுதலாக புதுச்சேரிக்கு ஆளுநராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியல், மாநிலத்தை பாழ்படுத்திய மோசமான அரசியலை புதுச்சேரி மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அரசியல் சட்டம், ஜனநாயகத்தை சீர்குலைத்து கேலிப் பொருளாக்கியவர் கிரண்பேடி. அதிகார மோகம் கொண்ட ஒரு துணைநிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு. போட்டி முதல்வராக செயல்பட அனுமதித்து தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.