அம்மாவின் மரணத்திற்கு காரணம் திமுககாரர்கள்- மரகதம் குமரவேல் பரபரப்பு பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தலைமையில் இந்த மாற்றுக்கட்சியினர் இணைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய த.வெ.கவில் இணைந்த மரகதம் குமரவேல், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இங்கு ஆறுமுகம் என்று ஒரு மாவட்ட செயலாளர் இருக்கிறார். அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் நான் வெற்றிப் பெற கூடாது என செயல்பட திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் வாங்கினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதனை மிக விரைவில் வெளியிடுவேன். திமுக ஆதரவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க எடப்பாடியார் திட்டமிட்டார். இது நியாயமா? சட்டமன்றத்தில் ஒரு பெண் என்று பாராமல் துரைமுருகன் அவர்கள் அம்மா அவர்களை இழிவுப்படுத்தினார். அம்மாவின் மரணத்திற்கு காரணம் திமுககாரர்கள். அவர்களோடு கூட்டணி வைக்கலாமா? இதை எப்படி எடப்பாடி பழனிசாமி சிந்தித்தார்? எனக்கு பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர். அதனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தவெகவில் நான் சேர ரூ.50 கோடி வாங்கியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். முடிந்தால் ரெய்டு விட்டு பார்க்கட்டும். திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தியவர் இ.பி.எஸ் தான். பெண் என்றும் பாராமல் என்னை மிகவும் கொச்சைப்படுத்தினார்கள்” என்றார்.