தடுமாறிய திமுக உறுப்பினர்: உதவிய முதலமைச்சர் விஜய்..!
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (செப்.7) தர்ணாவில் ஈடுபட்டு போராட்டத்தை முடித்து எழுந்தபோது, திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரை.சந்திரசேகரன் திடீரென நிலைதடுமாறினார். அதை கவனித்த முதலமைச்சர் விஜய் உடனடியாக தமது இருக்கையில் இருந்து எழுந்து, அவருக்கு கைகொடுத்து தூக்கிவிட்டு உதவினார். முதலமைச்சரின் இந்த செயல் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் செய்திருக்கிறது கட்சி நிதி என்கிற பெயரில் பணம் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் சென்றிருக்கிறது என அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் சட்டசபையில் கூறினார். இதையடுத்து அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் எனவும் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனார்..
ஆனால் அந்த கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. எனவே சபாநாயகரின் இருக்கைக்கு முன் கீழே அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு எதிரே நின்றிருந்த திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கீழே அமர்ந்து தர்ணா செய்தார். அதன்பின் எழ முயன்றபோது தடுமாறினார். அப்போது முதல்வர் விஜய் அவரின் கையை பிடித்து அவரை மேலே தூக்கி விட்டார். மேலும், தர்ணா நடத்துவதற்கு உதவி செய்யும்படி தனது டேபிளை கொஞ்சம் பின்னாள் தள்ளினார் விஜய்.
இந்த துரை சந்திரசேகரன்தான் சில நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் பற்றி சில முகபாவனைகளை செய்து காட்டியவர்.. அதேபோல் அமைச்சர் கீர்த்தனாவை மிகவும் மரியாதைக்குறைவாக பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.