காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை நோக்கி "துரோகி" என திமுகவினர் முழக்கம்..!!
Jun 5, 2026, 10:59 IST
காங்கிரஸ் தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம்
காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்த விடாமல் திமுகவினர் வாக்குவாதம்.
சென்னையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகையை நோக்கி "துரோகி" என திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் இருதரப்பு தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்திய பிறகே செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்த வேண்டும் என திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து
தெரிவித்துள்ளார்.
திடீரென விட்டுவிட்டுப் போனால் சங்கடங்களும், வருத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அதை மேலும் கூர்மைப் படுத்த வேண்டாம் எனவும் கேட்டு கொண்டார்