×

“விவசாயி பாப்பம்மாளுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தது திமுகவுக்கு பெருமை”

மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10பேர் உள்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இயற்கை விவசாயம் தொடர்பாக தேக்கம்பட்டியை சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாள், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ,புதுச்சேரி கேசவசாமி,சமூக சேவகர் சுப்புராமன்,தொழில் துறையைச் சேர்ந்த ஸ்ரீதர்வேம்பு, மறைந்த பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை தொழிலதிபர் சுப்ரமணியம், சென்னை மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், கலைத்துறையைச் சேர்ந்த கே.சி. சிவசங்கர், சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது
 

மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10பேர் உள்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இயற்கை விவசாயம் தொடர்பாக தேக்கம்பட்டியை சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாள், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ,புதுச்சேரி கேசவசாமி,சமூக சேவகர் சுப்புராமன்,தொழில் துறையைச் சேர்ந்த ஸ்ரீதர்வேம்பு, மறைந்த பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை தொழிலதிபர் சுப்ரமணியம், சென்னை மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், கலைத்துறையைச் சேர்ந்த கே.சி. சிவசங்கர், சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது! இது கழகத்துக்கும் பெருமை!
அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர்; கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர். அவருக்கும் #PadmaAwards பெற்ற தமிழகச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்றார்.

அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறப்புமிக்க பத்ம விருதுகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வில்லிசைக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா, இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் வீராங்கனை பி.அனிதா, விவசாயி திருமதி.பாப்பம்மாள், கலைத்துறையைச்சேர்ந்த திருமதி. பாம்பேஜெயஸ்ரீ,புதுச்சேரி திரு.கேசவசாமி,சமூக சேவகர் திரு.சுப்புராமன்,தொழில் துறையைச் சேர்ந்த திரு.ஸ்ரீதர்வேம்பு உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவர்கள் சார்ந்திருக்கிற துறைகளில் இன்னும் பல சாதனைகளைப்புரிய வாழ்த்துகிறேன்.

மறைவுக்குப் பிறகு பத்ம விருது வழங்கப்படவிருக்கிற பிரபல பின்னணிப்பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை தொழிலதிபர் திரு.சுப்ரமணியம், சென்னை மருத்துவர் திரு. திருவேங்கடம் வீரராகவன், கலைத்துறையைச் சேர்ந்த திரு.கே.சி. சிவசங்கர் ஆகியோரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்”என்றார்.