×

“அவமானப்படுத்தினார்; கடைசியில் அவரே அவமானப்பட்டு போனார்” : கே.என்.நேரு

ஒரு ஆளுநர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் கிரண்பேடி என்று கே.என்.நேரு விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக திருச்சி வடக்கு, மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில மாநாடு மார்ச் 14இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணிகளை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கவனித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “விவசாயக் கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் தான் பயன் பெற்றுள்ளனர். கூட்டுறவு
 

ஒரு ஆளுநர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் கிரண்பேடி என்று கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக திருச்சி வடக்கு, மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில மாநாடு மார்ச் 14இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணிகளை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கவனித்து வருகிறார்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “விவசாயக் கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் தான் பயன் பெற்றுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுகவினர் கடன் பெற்று பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஆதாரத்தை காட்ட முடியாது; ஆனால் ஆட்களை காட்டுகிறோம்.திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவின் கூட்டுறவு முறைகேட்டை ஆதாரத்துடன் நிரூபிப்போம். ஒரு ஆளுநர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் கிரண்பேடி . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தினார். கடைசியில் அவரே அவமானப்பட்டு போனார். இது தற்போது பதவியில் தமிழிசைக்கும் பொருந்தும். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு 360 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. இதில் சுமார் 7 முதல் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் . அத்துடன் மாநாட்டில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பது குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். வரும் தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெறும்” என்றார்.