40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?- கனிமொழி
Feb 16, 2025, 13:30 IST
40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவிவந்தாலும், மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காக்க ஆவி தரவும் தயங்கிடோம். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?