"நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது முதலே திமுக எதிர்த்து வருகிறது" - கனிமொழி
டெல்லியில் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இந்திய நாட்டின் மாணவர்கள் முன்னெடுத்திருக்கி் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு, திமுக சார்பிலும், திமுக தலைவர் சார்பிலும் எங்களது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வு எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்துகொண்டு நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான கருத்துகளை மட்டுமே தமிழ்நாடு எடுத்துரைக்கும். மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாணவர்கள், விவசாயிகள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தால் வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார்கள். மருத்துவக் கல்விக் கனவுகளோடு முன்வரும் மாணவர்களுக்கு, ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்ற பெயரில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த தேர்வு, ஒரு சார்பினர் மட்டுமே மருத்துவர்களாக வழிவகுப்பதை சுட்டிக்காட்டி, இதற்கு எதிராக தொடர்ந்து தி.மு.க போராடி வருகிறது” என்றார்.