×

“மூச்சுத்திணறும் குழந்தைக்கு மருந்து வாங்க துப்பில்லை”- திமுக குற்றச்சாட்டு

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு கடந்த சில மாதங்களாகக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு கடந்த சில மாதங்களாகக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

குழந்தைக்கு மூச்சு விட மருந்து வாங்கத் துப்பில்லை. ஆனால், முதலவர் அரசியல் சுயவிளம்பரத்திற்காகவும் வாக்கிற்காகவும் 756 கோடி… pic.twitter.com/Lr87nD54Ln

— DMK IT WING (@DMKITwing) September 22, 2026


இதுதொடர்பாகதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு கடந்த சில மாதங்களாகக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைக்கு மூச்சு விட மருந்து வாங்கத் துப்பில்லை. ஆனால், முதலவர் அரசியல் சுயவிளம்பரத்திற்காகவும் வாக்கிற்காகவும் 756 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு '1 கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தைத் தொடங்கவுள்ளார்.

தங்க மோதிரம் கொடுப்பதால் மருத்துவர்கள், படுக்கைகள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியாது என்று மருத்துவர்களே தலையிலடித்துக் கதறுகிறார்கள். மூச்சுத் திணறும் குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து கொடுப்பதுதான் உண்மையான நிர்வாகம். அதை விட்டுவிட்டு, உயிருக்குத் தவிக்கும் குழந்தைக்குத் தங்க மோதிரம் மாட்டிவிட்டு ரீல்ஸ் நாடகம் ஆடத் துடிக்கிறது இந்தப் பொறுப்பில்லாத அரசு!” எனக் குறிப்பிட்டுள்ளது.