×

'இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி'! பெரியாரே கடுப்பாகி மண்டை மேலே போட்டிருப்பார்- விஜயை கடுமையாக விமர்சிக்கும் திமுக

 

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக என்றும் முன்னிற்கும்"னு ஒரு உருட்டு உருட்டுனீங்களே ஞாபகம் இருக்கா CM Saar? என விஜய்க்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “அடுத்த பிறவியில் விவசாயக் குடும்பத்தில் பிறப்பது இருக்கட்டும், முதல்ல இப்ப அவங்க கேட்குற காவிரி தண்ணியைக் குடுங்க CM Saar! "தெய்வங்களுக்கே உணவளிப்பவர்கள் நம் விவசாயிகள்"னு வசனம் பேசுனீங்களே, அந்த விவசாயிகள் விளைவிக்கத் தண்ணி குடுக்காம, தெய்வத்துக்கிட்ட போயி வேண்டி என்ன பயன்னு உங்க மங்குனி மண்டைக்கு உறைச்சதா? "தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக என்றும் முன்னிற்கும்"னு ஒரு உருட்டு உருட்டுனீங்களே ஞாபகம் இருக்கா CM Saar? இப்ப அதை மீட்டெடுக்காம 'டெல்டா விவசாயிகள் காதுல டால்டா' ஊத்திட்டு உங்க பாட்டுக்கு சாமி கும்பிடப் போறீங்களே, கொஞ்சம் கூட கூசலையா உங்களுக்கெல்லாம்? அதுசரி, 41 உயிருக்கே உங்கக்கிட்ட இருந்து இன்னும் பதில் இல்லையே!

​அன்னைக்கு, "எனக்கு விவசாயத்தைப் பற்றி ஆழமாகத் தெரியாது என்பது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்"னு பேசுனீங்களே, அதோட நிஜ அர்த்தம் இப்பதான் விவசாயிகளுக்கு உண்மையாவே புரிஞ்சிருக்கு! படமா இருந்தா 'என்ன நடந்தாலும் விவசாயத்த கை விட்றாதீங்க'னு அவங்க எமோஷனை காசாக்க சீன் வைக்கிறது! ஆனா நிஜத்துல, விவசாயி எக்கேடு கெட்டா நமக்கென்னனு, ஜோசியர் சொன்னதைக் கேட்டுக்கிட்டு நேரா கர்நாடகா கோவிலுக்கு வண்டிய விடுறது! பகுத்தறிவுப் பகலவன்கள் வாழ்ந்து சீர்திருத்திய தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்து சேர்ந்த மிகப்பெரிய சாபக்கேடு இந்த 'இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி'! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, கர்நாடகாவில் போய் சாமியாடும் இவரது கூத்துகளைப் பார்த்துவிட்டு, "தன்னை கொள்கைத் தலைவர் என்று சொல்லி கேவலப்படுத்துகிறானே" என மேலிருந்து தந்தை பெரியாரே கடுப்பாகி "Don't make me come down there, you punk!" எனத் தன் கைத்தடியால் மண்டை மேலேயே போட்டிருப்பார்!