“என்ன ப்ரோ வேறு எங்கும் நடக்கவில்லையா?”- விஜய்க்கு திமுக பதிலடி
ஐந்து மாவட்டத்தில் நாங்கள் பிரச்சாரம் செய்திருக்கிறோம் அங்கெல்லாம் எதுவுமே நடக்கவில்லை ஆனால் கரூரில் மட்டும் ஏன் இவ்வாறு நடந்தது என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு தனது எஸ்க் தளத்தில், “என்ன ப்ரோ வேறு எங்கும் நடக்கவில்லையா?
விக்கிரவாண்டி மாநாட்டின் போது 120க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 5 பேர் பலியாகினர்.
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 3 தொண்டர்கள் பலியாகினர்; 380’க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சியில் நடைபெற்ற பரப்புரையில் 50’க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற பரப்புரையில் 16 க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம் கூட்ட நெரிசலில் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் 25’க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டனர்.
எங்கும் சரியான நேரத்திற்கு வராததுதான் காரணம் ப்ரோ!” எனக் குறிப்பிட்டுள்ளது.