தேர்தலில் திமுக தோற்பது உறுதி: விஜய்..!!
சென்னையில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மிக மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப்போகும் அந்த தேர்தலின் கடைசி பிரசாரம்.
இப்படிப்பட்டவங்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்?எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள்.
வீட்டுவரி, குடிநீர்வரி, தொழில் வரி, விலைவாசி உயர்த்திவிட்டார். குப்பைக்கும் வரி போட்டார். மக்களின் கஷ்டங்களை மட்டும் உயர்த்திவைத்து உள்ளார்.இன்னும் பல படி சென்று, தமிழகத்தில் எந்த அரசும் வாங்காத கடனை உயர்த்தி வைத்துள்ளார். 5.5 லட்சம் கடன் கோடி வாங்கி உள்ளார்.
100 சதவீதம் இந்த விஷயத்தில் விஜயை நீங்கள் நம்பலாம். ஹிந்து ,முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாக விஜய் எப்போதும் இருப்பேன். எம்மதமும் நம்மதம் அப்படி என்ற உண்மையின் முகம் தான் விஜயின் முகம்.
விஜய் ஒன்று கூறனால், அதில் இருந்து மாறமாட்டேன். ஸ்டாலின் போன்று கிடையாது.சிறுபான்மையினர் ஓட்டை வாங்குவதற்காக ஒரு பக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழக காங்கிரசை தனது பைக்குள் போட்டுக் கொள்வது. மறுபக்கம் கட்சியை காப்பாற்ற பாஜவுடன் மறைமுக கூட்டணியில் இருக்க வேண்டியது. ஒரு பக்கம் கதர் வேஷம். மறுபக்கம் காவி வேஷம் போட வேண்டியது. பாஜவுக்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது.
பாஜவின் முதல் அடிமை யார் என்ற போட்டி வேறு. நீயா... நானா.. யார் யாருக்கும். திமுகவுக்கும் மற்றும் பலருக்கும்.சிறுபான்மை சகோதரரோடு விஜய் கூட நிற்பேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.இப்போது சமீபத்தில் காமெடி நடக்கிறது. ஸ்டாலினும்,மற்றும்பலரும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கடுப்பில விட்ட கணிப்பை விடுகின்றனர்.அதில் திமுக 300, மற்றும் பலர் 700 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கின்றனர். இவ்வளவு தொகுதி எங்குள்ளது. குருட்டாம்போக்கில் அடித்து விடுவது.தில்லுமுல்லுவுக்கு அளவே இல்லை.
இவ்வாறு விஜய் பேசினார்.