திமுகவினர் ஷாக்..! இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்..? வெளியான கருத்துக்கணிப்பு..!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக 'Constituency Insights' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தவெக முதலிடம் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 2-ஆம் இடத்தையும், திமுக 3-ஆம் இடத்தையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல தாராபுரத்திலும் தவெக 33.8% வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஆண்களிடையேயும் பெண்களிடையேயும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
- தவெக: 36.8% பெண் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்து முதலிடத்தில் உள்ளனர்.
- அதிமுக: 30.8% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
- திமுக: 25.4% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
- கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தலைவர் விஜய்யின் கட்சிக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு பெருமளவில் கை கொடுத்தது போலவே, இந்த இடைத்தேர்தலிலும் பெண்களின் ஆதரவு அவர்களுக்குக் சாதகமாக இருப்பதாக விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆண் வாக்காளர்களின் ஆதரவு விவரம்
- அதேபோன்று, சுமார் 3,800 ஆண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் தவெகவே முன்னணியில் உள்ளது.
- தவெக : 35.0% ஆண் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
- அதிமுக: 31.3% வாக்குகள் வரை பெற்றுள்ளது.
- திமுக: 26.1% வாக்குகள் பெற்றுள்ளது.
அதேவேளையில், 50 வயதைக் கடந்த மூத்த வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பெரும்பாலும் திமுக ("சூரியன்") அல்லது அதிமுக ("இரட்டை இலை") ஆகிய பாரம்பரியச் சின்னங்களுக்கே வாக்களிக்கும் மனநிலையில் இருப்பதாகவும், இளம் வாக்காளர்களே விசிலுக்கு (தவெக) வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.