திமுகவினர் ஷாக்..! திருவையாறு திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு...!
Nov 11, 2026, 05:45 IST
திருவையாறு திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் கடந்த ஆகஸ்டு மாதம் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் மரியாதைக்குறைவாக பேசியதுடன், ஆபாச வார்த்தைகளாலும் திட்டினார்.
மேலும் அமைச்சர் கீர்த்தனாவை தரக்குறைவாக ஒருமையில் பேசியதுடன், மிகவும் மரியாதைக்குறைவாகவே பேசினார். இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெகவினர் வலியுறுத்தினர்
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாக பேசியதாக திருவையாறு திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் நாளை (அதாவது இன்று காலை) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.