தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி - அண்ணாமலை..!
Updated: Dec 26, 2025, 10:21 IST
பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- மத அரசியல் செய்வது நாங்கள் இல்லை. அனைத்து மத பண்டிகைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து சொல்கிறார். ஆனால் முதல்-அமைச்சர் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பண்டிகைகளுக்கு தான் வாழ்த்து கூறுகிறார்.
இதில் இருந்து மத அரசியல் செய்வது யார் என்று உங்களுக்கே தெரியும். தி.மு.க.வின் தோல்வி பயம் நமக்கு தெரிகிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி. இதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்விக்கு, டெல்லி பகூத் தூர்ஹே (டெல்லி அதிக தூரத்தில் உள்ளது) என இந்தியில் அண்ணாமலை பதில் அளித்தார்.