×

திமுக ஆட்சி அமைந்து இன்றோடு 4044 திருகோயில்களில் குடமுழுக்கு

 

சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் திருக்கோயிலில் 4,000-ஆவது குடமுழுக்காக இன்று நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் திருக்கோயிலில் 4,000-ஆவது குடமுழுக்காக இன்று நன்னீராட்டு பெருவிழா  நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட சேமாத்தம்மன் திருக்கோயிலில்
கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையதுறை சார்பில் நடத்தப்படும்  4,000-ஆவது கோயில் குடமுழுக்காக நடைபெறும் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

இன்று மட்டும் தமிழ்நாட்டில் உள்ள 75 திருக்கோயில்களில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று உள்ளது, திமுக ஆட்சி அமைந்து இன்றோடு 4044 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கௌமார மடம் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் , ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.