நடிகை விந்தியாவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு
Jul 19, 2023, 12:29 IST
நடிகை விந்தியாவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அதிமுக நிர்வாகியும் , நடிகையுமான விந்தியா குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை விந்தியா புகார் அளித்த நிலையில், குடியாத்தம் குமரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.