×

“ஸ்டாலினின் முகத்தில் இருக்கும் தழும்பு என்னனு தெரியுமா?”- டிஆர்பி ராஜா

 

தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல! அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது! சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு. ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு!

தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!

அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!

சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப்… pic.twitter.com/8vS9DiIB50

— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 7, 2026



ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்! சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்! அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம். தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம். தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.