☰
×

குறைந்த விலையில் கொள்முதல் செய்தும் அதிகாரி மாற்றம் ஏன்?- முன்னாள் அமைச்சர் கேள்வி

 

துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா? என திமுக முன்னாள் அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இது உண்மையென்றால், குறைந்த…

— R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@r_sakkarapani) October 5, 2026


இதுதொடர்பாக சக்கரபாணி தனது எக்ஸ் தளத்தில், “தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்?எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?

இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா?துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா? துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.