“ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! எதிர்த்தால் சிறைக் கொட்டடி”- அன்பில் மகேஷ்
தன்னை ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! ஜனநாயக வழியில் எதிர்த்தால் சிறைக் கொட்டடி! இதுதான் த.வெ.க. அரசின் மாற்றம் என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தன்னை ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! ஜனநாயக வழியில் எதிர்த்தால் சிறைக் கொட்டடி! இதுதான் த.வெ.க. அரசின் மாற்றம்.
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) July 20, 2026
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சி.எம். சார் @actorvijay தலைமையிலான அரசு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது…
இதுதொடர்பாக அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில், “தன்னை ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! ஜனநாயக வழியில் எதிர்த்தால் சிறைக் கொட்டடி! இதுதான் த.வெ.க. அரசின் மாற்றம். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சி.எம். சார் விஜய் தலைமையிலான அரசு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது.இந்த மாதிரியான அதிகார வன்முறை இனிமேலும் தொடரக் கூடாது. திரு.மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.