×

“வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை”- அன்பில் மகேஸ்

 

மிரட்டல்களுக்கு அடிபணியாத ஊக்கத்தை அளிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் தனியார்  பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் 100 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்மந்தமாக 118 ஆவணங்கள், -18, Laptop-3, Pendrive-8, Desktop (inbuild Hard Disk)-2, Tablet–1, Apple I pad-1 கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், “
மிரட்டல்களுக்கு அடிபணியாத ஊக்கத்தை அளிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் கே.என்.நேருவுக்கும், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்... “வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை”” எனக் குறிப்பிட்டுள்ளார்.