திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க செயலி! மக்களும் கருத்து கூறலாம்...
Dec 30, 2025, 18:19 IST
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தேர்தல் அறிக்கைக்கு பிரத்யேக செல்போன் செயலி மூலம் கருத்து கேட்க திமுக திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை நாளை அறிமுகம் செய்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலதிபர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.