வைதீக முறையில் இல்லத் திருமணம்- வருத்தம் தெரிவித்த துரைமுருகன்
வைதீக முறையில் திருமணம் நடத்தியதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பெயர்த்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாவும் - அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் - வைதீக முறைப்படியே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பெயர்த்தியின் திருமணம் நடைபெற்றது.
எனது பெயர்த்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இவ்வைதீக முறை திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.