×

“எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது”- உதயநிதி ஸ்டாலின்

 

சுயமரியாதைக்கு ஸ்பெல்லிங் தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்று இன்று மாலை பந்தநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.


திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை ஆதரித்து இன்று மாலை பந்தநல்லூர் கடை வீதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் .

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமி முதலில் ஜெயலலிதா காலில் விழுந்தார். பிறகு சசிகலா காலில் விழுந்தார். அதன் பின் டிடிவி தினகரன் காலில் விழுந்தார், தற்போது மோடியின் காலில் விழுந்துள்ளார் . எடப்பாடி பழனிச்சாமி பதவிக்காக யார் காலிலும் விழுவார். சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியாதவர். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் கற்று தர வேண்டும். இதுவரை 10 தேர்தலில் தோல்வியுற்ற பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமியாக  ஆக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை மீட்க வேண்டும் என கூறி வருகிறார். முதலில் பாஜகவிடம் அடமானம் வைத்த அண்ணா திமுகவை எடப்பாடி பழனிச்சாமி மீட்கட்டும். அதன் பிறகு தமிழகத்தை மீட்கட்டும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவரை உயர்கல்வித்துறை அமைச்சராக ஆக்கி அழகு பார்த்தது திமுக” என்றார்.