#JustIn திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!!
Jul 12, 2023, 10:59 IST
நாமக்கல் திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடும்பத்துடன் திமுக கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார். ராசிபுரம் 13வது வார்டு திமுக கவுன்சிலர் தேவிபிரியா தனது கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது 18 வயது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.