பிடிவாதம் பிடிக்கும் ராகுல்- ஓட்டலில் காத்திருக்கும் நிர்வாகிகள்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் திமுக தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரசுக்கு குறிப்பிட்ட அளவில் இடங்கள் ஒதுக்க காங்கிரஸ் திமுகவை வற்புறுத்துகிறது. இப்போதே அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் காங்கிரஸ் நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படுவத தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் காத்திருக்கின்றனர். சென்னை தியாகராய நகரில் ஒரு ஓட்டலில் இருக்கும் சோடங்கர் காங்கிரஸ் தலைமையுடன் அலைபேசியில் தொடர்ந்து பேசிவருகார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் செல்போனில் பேசியபடி நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 28 சட்டமன்ற தொகுதிகள் தற்போது ஒரு ராஜ்யசபா சீட், பிறகு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக ட்திமுக கூறுகிறது குறிப்பிடதக்கது.